அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்
X
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலத்தில் ரூ.56 லட்சம் வர்த்தகம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் மொத்தம், 1,917 மூட்டையில், 61 டன் பருத்தி வரத்தாக இருந்தது.

இதில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 9,000 முதல், 10,566, டி.சி.எச்., ரகம், 10,000 முதல், 10,309, கொட்டு ரகம், 2,500 முதல், 5,500 ரூபாய் வரை விற்கப்பட்டது. மொத்தம், 56 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 387 விவசாயிகள், 10 வியாபாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!