புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்
X
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை இரண்டு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த, மெகா தடுப்பூசி முகாம்களை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகிறது. அவ்வகையில் தமிழகம் முழுவதும் நாளை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை, நல்லி கவுண்டம்பாளையம் பள்ளி மற்றும் வெங்கமேடு பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், முதலாம் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, தகுதி வாய்ந்தவர்கள் ஆதார் கார்டு நகல் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றுடன் இம்முகாமில் தவறாமல் பங்கேற்று பயன் பெறுமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் திருப்பூர் பகுதி செய்திகளை அறிய: https://www.instanews.city/tamil-nadu/திருப்பூர்; WhatsApp: https://www.watsapp.news/AN

Tags

Next Story