குன்னத்தூரில் காங்கிரஸ் கமிட்டியில் வட்டார ஆய்வு கூட்டம்

குன்னத்தூரில் காங்கிரஸ் கமிட்டியில் வட்டார ஆய்வு கூட்டம்
X

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார அளவிலான நிர்வாகிகள் ஆய்வு கூட்டம், மக்கள் ராஜன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், காங்கிரஸ் கமிட்டி வட்டார ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார அளவிலான நிர்வாகிகள் ஆய்வு கூட்டம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இதில், வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் இதயத்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் குன்னத்தூர் ஊத்துக்குளி பகுதிகளில் செயல்படும் ஒரு நம்பர் லாட்டரி மற்றும் முறைகேடான சம்பவங்களை காவல்துறை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், தங்கவேல், ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, ரவி, செந்தில், ராஜா , கிருஷ்ணன், சிவசண்முகம், தளபதி ரமேஷ் மகேந்திரன் காளிதாஸ் முருகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture