கூட்டுப் பண்ணைய திட்டம்: கலெக்டர் ஆய்வு

கூட்டுப் பண்ணைய திட்டம்: கலெக்டர்  ஆய்வு
X

அவிநாசியில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் பலன் குறித்து கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

விவசாய விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கானூர் கிராமத்தில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் 720 விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் விவசாய விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி வருகின்றனர். குழுவின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, விவசாயிகளை உள்ளடக்கிய குழுவின் செயல்பாடுகள் குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்கினர். கள ஆய்வின் போது அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story