போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!
X

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, வஞ்சிபாளையம் நால் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள கம்பம். 

திருமுருகன்பூண்டி காவல்துறை மற்றும் வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், வஞ்சிபாளையத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை தடுக்க, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பேருதவி புரிகின்றன.

அவ்வகையில், வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் திருமுருகன்பூண்டி காவல்நிலையம் ஒத்துழைப்புடன், வஞ்சிபாளையம் பகுதியில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றது.

அதன்படி,வஞ்சிபாளையம் அரசுப் பள்ளி எதிரே உள்ள நான்கு ரோட்டில், முதலாவது சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெக்கலூர் பிரிவு, கனியாம்பூண்டி பிரிவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், இப்பணிக்கு நிதி உதவி, பொருள் உதவி செய்து, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!