அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் : இருவர் காயம்

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் : இருவர் காயம்
X

பைல் படம்.

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டுக்குள் புகுந்ததால் இருவர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். இவர், புளியம்பட்டி சேவூர் ரோட்டில் காரில் சென்றுக்கொண்டிருந்தார். கார் சூரியபாளையம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலை ஓரமிருந்த சக்திவேல் என்பவரது வீடுக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த சக்திவேல், அவரது தாய் ஜோதிமணி,60 ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!