திருப்பூர்: அடிப்படை வசதிகள் கேட்டு பிளாசம் குடியிருப்போர் மனு

திருப்பூர்: அடிப்படை வசதிகள் கேட்டு பிளாசம் குடியிருப்போர் மனு
X

புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டம். 

அடிப்படை வசதிகள் கேட்டு, கிணத்துக்காடு பிளாசம் குடியிருப்போர் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவி கஸ்தூரி பிரியா தலைமையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை நடத்தினர். ஊராட்சியின் தேவை, கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், வஞ்சிபாளையம் கிணத்துக்காடு பகுதியில் உள்ள பிளாசம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பிளாசம் குடியிருப்பு வளாகத்தினுள் தார்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்; தெரு விளக்கு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்; குடிநீரில் குளோரின் கலந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும், குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்