தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்

தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்
X
பொங்கல் தொடர் விடுமுறையால், அவினாசியில் பருத்தி ஏலம் களையிழந்து காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பிரதி புதன் தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட ஏலத்தில், 35 டன் பருத்தி வரத்தாக இருந்தது. ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 9,000 –11,006 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11,000– 14,005 ரூபாய், கொட்டு ரகம், 2,500 முதல், 6,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. 220 விவசாயிகள், 12 வியாபாரிகள் பங்கேற்றனர்.

விற்பனை கூட சங்க நிர்வாகத்தினர் கூறுகையில், 'பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், வரத்து குறைவாகவே இருந்தது. அடுத்த வாரம் புதன்கிழமை, குடியரசு தினம் என்பதால், விடுமுறை தினமாக உள்ளது. எனவே, 25ம் தேதி பருத்தி ஏலம் நடத்தப்படும்' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story