அவிநாசி வேளாண் சங்கத்தில் ரூ.32.67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண் சங்கத்தில் ரூ.32.67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
X
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வேளாண் சங்கத்தில் ரூ.32.67 லட்சத்துக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.

அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், சேவூர், பொள்ளாச்சி, பெருந்துறை, கோபி, சத்தி, தர்மபுரி, உள்ளிட்ட இடங்களில் இருந்து பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இன்று,1497 மூட்டை பருத்தி, ஏலத்துக்கு எடுத்து வரப்பட்டன. ஆர்சிஎச், பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் 7120 க்கும், டிசிஎச்., பருத்தி குவிண்டால் ரூ.7000 முதல் 7900க்கும், கொட்டு பருத்தி குவிண்டால் ரூ.1500 முதல் 3000 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
how will ai affect our future