அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு

அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த  ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு
X

அவிநாசியில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு மனுக்கள் மீது தீர்வு கண்டார்.

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1430 ம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் 1430 ம் பசலிக்கான ஜமாபந்திக்கான மனுக்களை, கொரோனா நோய் தொற்று காரணமாக இணைய வழி, இசேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரில் வராமல் அனைத்து விதமான முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசு சான்று உள்ளிட்ட கோரிக்கைகள் மனுமக்கள் இணைய வழிச் சான்றுகள் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களை இணைய வழி மூலமாகவும் அல்லது பொது இ–சேவை மையம் மூலமாகவும் ஜூலை 31 ம் தேதி வரை பெற்று பரீலினை செய்து, மனு தாரருக்கு உரிய தகவல் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி துவங்கி நடக்கிறது. சேவூர், அவிநாசி மேற்கு உள்வட்டத்தை சேர்ந்த வருவாய் கிராமங்களுக்கு நில அளவவை சங்கிலி, கோணக் கட்டை அளவுகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார். இதில் வருவாய் துறை ஊராட்சி துறை கல்வி துறை சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future