ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: அவினாசியில் சாலை மறியல்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: அவினாசியில் சாலை மறியல்
X

பைல் படம்.

அவினாசி அருகே, ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஆட்டையம்பாளையத்தில், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு வசிக்கும் ஸ்ரீதர் என்பவர், கோழிக்கடை நடத்தி வருகிறார். மதுரையை சேர்ந்த தனது உறவினர் அழகுபாண்டி என்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து, ஓட்ட ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஆட்டோ ஸ்டாண்டில், உள்ளூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே, ஆட்டோக்களை நிறுத்தி ஓட்ட அனுமதியுண்டு என, அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட கைகலப்பில் அழகு பாண்டியுடன் வந்தவர் அங்கிருந்த கந்தசாமி என்பவரை கத்தியால் வெட்டினார்.

காயமடைந்த கந்தசாமி, அவிநாசி அரசு மருத்துவமனைமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆட்டையம்பாளையம் பகுதியில், அங்குள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவினாசி – மேட்டுப்பாளையம் சாலையில், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா