விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்!

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்!
X

விவசாய நிலத்துக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை

வாணியம்பாடி அருகே விவசாய நிலங்களுக்குள்  நுழைந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய விரட்டினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காவலூர் வனப்பகுதி பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி ஒட்டி விவசாய நிலங்களில் நேற்று இரவு ஒற்றை யானை ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த ஒரு வாரங்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் வனப்பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் விவசாய நிலத்திற்குள் வர தொடங்கியுள்ளது.

அதுபோல் நேற்று இரவு ஒற்றை யானை ஒன்று காவலூர், கிருஷ்ணாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்தது. விவசாய நிலத்தில் உள்ள கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரை அருந்தியது. அந்த யானை கிராமத்துக்குள் நுழையாதபடி கிராம மக்கள் பட்டாசு வெடித்து விடிய விடிய வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

தொடர்ந்து வனவிலங்குகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு வர தொடங்கியுள்ளது. இதனால் வனத்துறையினர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளுக்கு பாதுகாக்க வேண்டும் என கிராம மக்களும் வன ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

#instanews #tamilnadu #enters #farmland #Villagers #chase #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #விரட்டிய #fullnight #விவசாயநிலத்தில் #காட்டுயானை #Wildelephant #village #Vaniyambadi #கிராமமக்கள் #wildlife #animal #elephant #elephants #chasing

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!