சசிகலாவை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கே.சி வீரமணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இனிப்புகளை வழங்கியும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள அதிமுக கட்சி மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, நேற்றைய தினம் வி.கே சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று என்னுடைய அரசியல் பயணம் தொடரும் என கூறியிருந்தார். இதற்கு அதைப்பற்றி நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வெற்றி நடை போட்டு செயல்படுகின்றது. எங்களிடம் இருந்தவர்கள், குறிப்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தவர்கள் அந்த அணிக்கு சென்றார்கள் ஆனால் மீண்டும் தாய் கழகத்துக்கு வந்து இணைந்துள்ளனர்.
தற்பொழுது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்ற தேர்தல். நகர மன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற்றால் அதிமுக அமோக வெற்றி பெறும். நகர மன்றத் தேர்தலில் போட்டியிட நாங்களும் தயார் நிலையில் உள்ளோம் எனக் கூறினார்
இந்த நிகழ்வில் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu