வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம நபர்

வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம நபர்
X
வாணியம்பாடியில் ஆளில்லா வீட்டில் உள்ள பொருட்களைக் கொள்ளை அடிக்கும் மர்ம நபர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக ,வீட்டிற்குள் திடீரென நுழைந்து யாரும் இல்லை என்றால் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக வாணியம்பாடி காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் லேப்டாப் செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் பகுதியில் சத்யா என்பார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத பயன்படுத்தி அவர் வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டுகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 1 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தொடர்ந்து வாணியம்பாடி முழுவதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்