கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார்

கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார்
X

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய எம்எல்ஏ செந்தில்குமார்

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய எம்எல்ஏ செந்தில்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் சுகாதார துறையினர் சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் கொரோனா தடுப்பூசி மற்றும் நோய்க்குறி அணுகுமுறை முகாம் நடைபெற்றது

இம்முகாமிற்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் பேசி வீடு வீடாக சென்று அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஊக்கப்படுத்தி முகாமிற்கு பொதுமக்களை அனுப்பி வைத்து பயன்பெற செய்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்