வாணியம்பாடி கொலை வழக்கு: மேலும் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

வாணியம்பாடி கொலை வழக்கு: மேலும் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
X

குண்டர் சட்டத்தில் கைதான டெல்லி குமார் மற்றும் நயீம்

வாணியம்பாடி மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி குமார், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த நயீம் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் அதில் 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!