வாணியம்பாடி நகராட்சி: சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி

வாணியம்பாடி நகராட்சி:   சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி
X

வாணியம்பாடி நகராட்சி 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு  திருநங்கை ஈஸ்வரி  வேட்பு மனு தாக்கல் செய்தார்

வாணியம்பாடி நகராட்சி கோவிந்தபுரம் 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அதில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று நகராட்சி 20 வது வார்டு பகுதிக்கு திருநங்கை ஈஸ்வரி தனது வேட்பு மனுவை நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!