வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து கொள்ளை

வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து கொள்ளை
X
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் வசீம் அக்ரம். இவர் தனியார் நிதி உதவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பின்னர் இரவு தன்னுடைய மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்த நிலையிலும் பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வசீம் அக்ரம் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி டிவி பதிவு காட்சிகளை சேகரித்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்களை குறித்து தேடி வருகின்றனர்.

பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai marketing future