/* */

வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் களப்பணி!

வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் விதை பந்துகளை தயார் செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் களப்பணி!
X

விதை பந்து தயாரிக்கும் பணியில் மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான அண்ணா நகரில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி இளைஞர்கள் நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், கொரோனா காலத்தில் வனப்பகுதியை பசுமையாக மாற்றுவதற்காக விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் விதை பந்துகளை தயார் செய்து அவற்றை வனப்பகுதியில் வீசப்படும். இதனால் மழைக்காலங்களில் அந்த விதைப்பந்துகள் செடிகளாக வளர்ந்து இயற்கை வளங்களைக் காக்க பேருதவியாக இருக்கும். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


விதைப்பந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாணவர்கள்

கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி அந்த விதை பந்தினை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளோடு இணைந்து வனப்பகுதியில் வீசினர். தொடர்ந்து இந்த ஆண்டு குருடனின் காலகட்டத்தில் விதைப்பந்து தயாரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியின் மூலம் கொரோனா ஊரடங்கை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் செயலில் ஈடுபட செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 May 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க