வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்
X
வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

கொரோனா பெருந் தொற்றின் தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு குறிப்பிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி. எல்.சாலை, ஜின்னா சாலை, முகமது அலி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு காலத்தில் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலணி கடை, பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடை, பிரின்டிங் ஆப்செட் பிரஸ் ஆகியவை இயங்கி வந்தது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் 5 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!