ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
X

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசியை லாரியுடன் பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர்

ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்க்கு ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை சென்றுக் கொண்டிருந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேசன் அரிசி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பெருமாள் (வயது 39), சஞ்சீவி (வயது 21) ஆகியோரை கைது செய்து, லாரியில் இருந்த 4 டன் ரேசன் அரிசியுடம் லாரியை பறிமுதல் செய்தனர்.

இதே போல் உமாராபாத் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதி மக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் பிச்சைமுத்து( வயது 35) என்பவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் ரேசன் அரசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!