வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது
X
வாணியம்பாடியில் மீட்கப்பட்ட ஆட்டோக்களும் திருடிய நபரும்
வாணியம்பாடி பகுதியில் தொடர் ஆட்டோ  திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்  கைது செய்யப்பட்டு 6  ஆட்டோக்கள் மீட்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று., வருவதால் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் தும்பேரி கூட்டு சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த குற்றபிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை அம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விச்சாரனையில் வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிர்மல் ராஜ் (28) எனவும், அம்பலூர், புத்துக்கோயில், கொடையாஞ்சி, கலந்திரா, உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது

இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பலூர் காவல்துறையினர் அவரிடமிருந்த 15 லட்சம் மதிப்பிலான 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!