கொடுத்த கடனை திருப்பி கேட்க சென்ற லாரி உரிமையாளர் அடித்துகொலை

கொடுத்த கடனை திருப்பி கேட்க சென்ற லாரி உரிமையாளர் அடித்துகொலை
X

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் 

வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்க சென்ற லாரி உரிமையாளரை அடித்துகொலை செய்த கணவன், மனைவி தலைமறைவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வெங்கடேசன் (வயது 34) இவர் 3 லாரிகள் வைத்து தொழில் நடத்தி வருகிறார். சின்ன வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் லாரி மெக்கானிக்காக உள்ளார்.

சங்கருக்கு கடனாக வெங்கடேசன் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். தொடர்ந்து அதை திருப்பிக் கேட்டு வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று சங்கர் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் அப்போது சங்கருக்கும் வெங்கடேசனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

அப்போது சங்கர் தனது வீட்டு அருகாமையில் இருந்த இரும்பு கம்பியால் வெங்கடேசனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த வெங்கடேசனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய சங்கர் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business