வாணியம்பாடியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

வாணியம்பாடியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

வாணியம்பாடியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

வாணியம்பாடியில்  தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது. ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல் போன் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதி தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கடந்த 3ம் தேதி இருசக்கர வாகனத்தில் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் சென்று கொண்டு இருந்த போது பின்தொடர்ந்து வந்த இருவர் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது இரு சக்கர வாகன எண்னுடன் கார்த்திகேயன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பெருமாள் பேட்டை பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது கடந்த 3ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்களின் இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருக்கு உதவியாக 3 பேர் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் செல்பவர்களின் செல்போன்களை வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 4 பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Tirupattur #Vaniyambadi #Cellphone #robbery #arrested #திருப்பத்தூர் #வாணியம்பாடி #செல்போன் #வழிப்பறி #கைது #theft

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!