வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
X

வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடியில் நகர்புற தேர்தலில் பதிவாகும்  வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள கல்லூரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்ததில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

இன்று அந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தேர்தல் பணியாளர்கள், வேட்பாளர்கள் முகவர்கள் நுழைவுவாயில் மற்றும் பதிவாகும் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவை அமைக்க வரைபடம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர் களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்