வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா
X

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 3 பேரூராட்சிகளில் உள்ளது ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்றன.

இங்கு பதிவாக கூடிய மின்னணு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையமாக வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள ஜெயின் மகளிர் தனியார் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி வாக்கு எண்ணப்படுகின்றன.

இந்தநிலையில் தேர்தல் பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அமர் குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கக்கூடிய அறை மற்றும் வாக்குகள் எண்ணக் கூடிய அறைகள் உள்ளிட்ட அமைவது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பாதுகாப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil