வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் சாராய வழக்கில் கைது

வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் சாராய வழக்கில் கைது
X

சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட வேட்பாளர் 

ஆலங்காயம் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது. 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலாஏரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மீது வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் நகர காவல் நிலையங்களில் குட்கா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவரை போலீசார் தேடிவந்தனர்.

சில மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இவருக்கு தேர்தல் ஆணையம் சீப்பு சின்னம் ஒதுக்கி இருந்த நிலையில் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வாணியம்பாடி லாலா ஏரி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது வாணியம்பாடி கிராமிய போலீஸார் கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த 2 லாரி டியுப்களில் மற்றும் கேனில் வைத்திருந்த 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!