வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
X

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் மிட்டாதாரர் ஏரி பகுதியில் மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்து தகவலின் அடிப்படையில் மணல் கடத்தல் தனிப்பிரிவு போலீசார் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

அப்போது பகுதியிலிருந்து மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தனபால் (வயது 41), ஜோதி ராமலிங்கம் (வயது 24), பழனி (வயது 43), சேகர் (வயது 50) ஆகிய 4 பேர் கைது செய்தனர் அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா