வாணியம்பாடியில் பாலத்தில் மின்விளக்கு அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

வாணியம்பாடியில் பாலத்தில் மின்விளக்கு அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
X

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், ஆட்சியரை சந்தித்து பாலத்தின் மீது மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளித்தார்

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், ஆட்சியரை சந்தித்து பாலத்தின் மீது மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளித்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சி, தேவஸ்தானம்-பெரிய பேட்டையை இணைக்கும் இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பாலத்தின் வழியாக சிக்கனாங்குப்பம், ஈச்சங்காடு சங்கராபுரம், வடக்குப்பட்டு, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் இரவு நேரத்தில் மின் விளக்கு இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இதனை உடனடியாக சீரமைக்க கோரி திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அமர் குஷ்வாஹாவை நேரில் சந்தித்து மனு அளித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!