துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்

துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
X

துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பொதுமக்களிடம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காண உத்திரவிட்டார்.

4 தொகுதியில் பெறப்பட்ட மனுக்களை விரைவாக விசாரணை செய்து முடிக்க வேண்டும். 60 நாட்களுக்கு மேலாக விசாரணையில் உள்ள மனுக்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். மற்ற மனுக்களை விரைவாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுகக் வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க முடிந்த வரையில் தீர்வு கிடைக்க வழிவகைகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்வு வழங்கிட வேண்டும். தள்ளுபடி குறித்து விரிவான தகவல்களை பொதுமக்களுககு வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சார் ஆட்சியர் பொருப்பு வில்சன்ராஜசேகர், துணை ஆட்சியர் கிருஷண் மூர்த்தி, வட்டாட்சியர்கள் சிவப்பிரகாஷம், மோகன், அனந்தகிருஷணன், மகாலட்சுமி, சமூக பாதுகாப்பு துறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!