திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் கலந்துகொண்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறதா, மேலும் கொரோனா காலகட்டத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு எவ்விதத்தில் உள்ளது என்பதை குறித்து அதிகாரிகளிடம் மற்றும் தூய்மை பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதில் தூய்மைப் பணியாளர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் அவ்வாராக பேசுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளிடம் கூறினார்
அதேநேரத்தில் அவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் மற்றும் உபகரணங்கள், வழங்கப்படும் வழங்கப்படுகின்றன வா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆம்பூர் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 15ஆம் தேதி விஷவாயு தாக்கி உயிரிழந்த ரமேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 13 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu