திருப்பத்தூர் அருகே மதுபோதையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி கைது
திருப்பத்தூர் அருகே குடிபோதையில் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன்கள் கோவிந்தராஜ் (42), இவரது தம்பி கனகராஜ் (40). இவர்கள் மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜன் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் நடந்து செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.இது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜுக்கு பூங்கொடி போன் செய்து கூறியவுடன், உச்சகட்ட கோபத்தில் போதையுடன் வீட்டிற்கு வந்த கனகராஜ், தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய அண்ணன் கோவிந்தராஜை கத்தியால் வெட்டினார். இதனால் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
தகவலறிந்த கந்திலி காவல்நிலைய போலீஸார் கோவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கனகராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu