கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள்,  பாராட்டிய எஸ் பி
X
முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில் சிறுவர்களும் ஆர்வமாக தங்களது சிறு சேமிப்புகளை நிதியாக வழங்கிவருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூரை சேர்ந்த குமார், சுதா தம்பதியின் குழந்தைகளான ஹர்ஷிதா, சந்தியா ஸ்ரீ ஆகியோர் தங்களது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1095 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரை நேரில் சந்தித்து வழங்கி பாராட்டு பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!