முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்
X

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

மல்லப்பள்ளி ஊராட்சியில்  முருகன் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதன் இறுதி கட்ட பிரசாரம் இன்று 4 மாலை 5 மணிக்குள் முடிவடைவதால், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மோகன்ராஜ் (வயது 20) இவர் இன்று தமிழர்களின் முதற்கடவுள் முருகன் போல் வேடமணிந்து மல்லப்பள்ளி ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பெண்கள், இளைஞர்கள், மற்றும் பெரியவர்களிடம் தான் போட்டியிடும் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் முருகனே வந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறி சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்க்கு வாழ்த்துகள் கூறினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!