திருப்பத்தூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருப்பத்தூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
X

திருப்பத்தூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அணை கட்டுவதற்காக கையகப்படுத்திய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு ஆண்டியப்பனூர் பகுதியில் நீர்த்தேக்க ஓடை அணை ஒன்று கட்டியது. அதற்காக சுற்றியுள்ள விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக கூறியது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சில நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்றுவரை சரிவர இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது

அதனால், ஆண்டியப்பனூர் நீர் ஓடைக்கு நிலங்களைக் கொடுத்த விவசாயிகள், இன்று திடீரென திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரிசிலபட்டு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதன்பின்னர் முறையாக அரசு அதிகாரிகளும் இதுகுறித்து தகவல் கூறுவதாக கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!