/* */

திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
X

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வருகின்ற நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் ஒன்றியத்தில் 184 பள்ளிகள், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 176 பள்ளிகள் கந்திலி ஒன்றியத்தில் 173 பள்ளிகள், ஆலங்காயம் ஒன்றியத்தில் 117 பள்ளிகள் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் 143 பள்ளிகள், மாதனூர் ஒன்றியத்தில் 201 பள்ளிகள் என 800 அரசு மறறும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 194 தனியார் பள்ளிகளும் பின்பற்றபட வேண்டும்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் முதலாம் வகுப்பு முதல்12-ஆம் வகுப்பு வரை 1, 30, 430 மாணவார்க்கள் படிக்கின்றார்கள் பள்ளிகளின் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என உறுதிசெய்துகொள்ள வேணடும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும். உணவுகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமாகவும் வழங்கப்பட வேண்டும். உணவுகளை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தரமாக உள்ளதா என உணவினை சாப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேணடும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளுக்கு வருகைபுரியும் மாணவர்களை தெர்மல் ஸ்கேன் கருவியை மூலம் உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் கழிவறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் தொட்டிகளை இரண்டுமுறை பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேணடும்.

பள்ளி வளாக நுழைவுவாயிலேயே கிருமிநாசினி கொணடு மாணவர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பிறகு வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்ற பணியாளர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.

மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்திருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் மாவட்ட கல்வி முனிமாதன், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ்குமார், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Oct 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்