ஜோலார்பேட்டையில் ரெயிலில் மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் ரெயிலில் மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது
X

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கர்நாடகாவிலிருந்து மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கர்நாடகாவிலிருந்து மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10 ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டது இதனால் மது பிரியர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்ய கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓடும் ரெயில்களில் மது பாக்கெட்டுகள் கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் என்பவருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் தகவலின்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், முரளிமனோகரன், மற்றும் போலீசார் கடந்த 4 தினங்களாக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் ரெயில் பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி வெளியே செல்லும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில்பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 3வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது இறங்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் விற்பனை செய்ய 98 மது பாக்கெட்கள் கடத்தியதாக ஒப்புக்கொண்டார். அவர் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் அஜித்குமார் (வயது 23) என தெரியவந்தது

இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் வெளி மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து 98 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story