பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;
X
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையுள்ள பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருடைய தாயார் அற்புதம்மாள் தன்னுடைய மகன் உடல்நிலை கருத்தில் கொண்டும் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி, 30 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கியது. பரோல், இம்மாதம் (28 ஆம் தேதி) நாளையுடன் முடியவுள்ள நிலையில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, மேலும் 30 நாட்கள் பரோல் நீடித்து நிலையில் இன்று மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீடிப்பு செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா