பச்சூர் சென்றாய சுவாமி கோவில் தேர் ஊர்வலம் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பச்சூர் சென்றாய சுவாமி  கோவில் தேர் ஊர்வலம் பாதுகாப்பு குறித்து ஆய்வு
X

பச்சூர் கோவிலில் தரிசனம் செய்த எஸ்பி பாலகிருஷ்ணன்

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோவில் தேர் ஊர்வல பாதுகாப்பு குறித்து எஸ்பி நேரில் ஆய்வு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சென்றாய சுவாமி கோவில் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

இவ்விழா தொடர்ந்து 11 நாட்கள் வரை நடைபெறுகிறது. கடந்த 12ம் தேதி ஸ்ரீ சென்றாயசாமி 93ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கெடியேற்றத்துடன் துவங்கி வருகிற 22-ந் தேதி செவ்வாய் கிழமை வரை தொடர்ந்து 11 நாட்கள் வரை நடைபெறுகிறது.

முதல் நாள் முதல், சிறப்பு அபிஷேகம் ஆராதனை துவங்கி கருட சேவை திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருக்கல்யாண உற்சவம் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

நாளை வெள்ளிக்கிழமை தேர் ரதம் ஊர்வலம் நடைபெறுவதால் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார். இதனால் பாதுகாப்பு சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் ரவிகுமார் கோவில் தலைமை தர்மகர்த்தா தியாகராஜன் உள்ளிட்ட ஐந்தாம் நாள் உற்சவ தர்மகர்த்தாகள் பச்சூர் கிராம ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!