/* */

நாட்றம்பள்ளி அருகே மருமகள் படுகொலை: மாமனார் கைது

நாட்றம்பள்ளி அருகே மருமகளை வெட்டிப் படுகொலை செய்த மாமனாரை கைது செய்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே மருமகள் படுகொலை:  மாமனார் கைது
X

மருமகளை கொலை செய்த மாமனார் மணி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவருடைய மகன் சிவன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி முருகம்மாள் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். கணவன்-மனைவிக்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின் அங்கேயே தங்கி இருந்துள்ளார். வந்த நாள் முதல், மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.

நேற்று இரவு மீண்டும் மருமகளுக்கும் மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஆத்திரமடைந்த மாமனார் மணி, முருகம்மாளின் தலையில் சரமாரியாக வெட்டி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்