ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு
X

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு

30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்

சிறையில் கொரானா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால், நீரழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்ட பேரறிவாளன மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில், என்னுடைய மகன் உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு என்னுடைய கோரிக்கையை ஏற்று 30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் மகனுடைய மருத்துவம் தொடர வேண்டும். என்னுடைய 30 ஆண்டுகாலப் போராட்டம் தொடர்ந்து கொண்டே உள்ளது . என்னுடைய மகன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்

அதனடிப்படையில் முதல்வரிடம் என்னுடைய கோரிக்கையை ஏற்று முதல்வர் 30 நாள் பரோல் வழங்கியுள்ளார்.. மேலும் அவர் மருத்துவத்திற்காக அரசாங்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்