பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
X

பேரறிவாளன் 

ஐந்து மாதங்களாக பரோலில் வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது 6வது முறையாக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் புழல் சிறையில் கொரானா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்றுடன் பரோல் முடிந்த நிலையில்,இன்று காலை அவரது வீட்டிலிருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் பேரறிவாளன் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பரோலில் வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது மேலும் 6வது முறையாக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!