வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா

வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா
X
வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் எம்எல்ஏ தேவராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள கருணை இல்லத்தில், முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தை மற்றும் முதியோர்களுக்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மதிய உணவு வழங்கினார்.

அதேபோல்,கொரோனா சிறப்பு சித்த மருத்துவ முகாமில் உள்ள கொரோனா நோயாளிகள், தூய்மை பணியாளர்கள், செவிலியர், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 2000 நபர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மருத்துவர் செந்தில்குமார், அருள் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மருத்துவகள் என பலர் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!