நாட்றம்பள்ளியில் கருணாநிதியின் பிறந்தநாளில் எம்எல்ஏ தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

நாட்றம்பள்ளியில் கருணாநிதியின் பிறந்தநாளில் எம்எல்ஏ  தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்
X

நாட்றம்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

நாட்றம்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி மருத்துவமனை வளாகம் அருகே மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ச்சியாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கார்க், வட்டாட்சியர் சுமதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார் மருத்துவர் செந்தில்குமார், அருள் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!