ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
X
ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 126 பேர் தூய்மை பணியாளராக கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் இங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை அநாகரீகமாய் பேசுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தியும் அதேநேரத்தில் ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலறிந்து நகராட்சி கமிஷனர் ராமஜெயம் தூய்மை பணியாளர்களை இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து ரமேஷ் என்பவரை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அதே நேரத்தில் ஊதிய உயர்வு உயர்த்தி தருவதாகவும் கூறினர் அதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

ஜோலார்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!