ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டை  அருகே காரில் கடத்தி வந்த   மதுபாட்டில்கள் பறிமுதல்
X
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்தகரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து காரில் மது பாட்டில் கடத்தி வந்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த அன்புமணி (வயது 24), விஜய் (வயது 23) அஜித் (வயது 23) ஆகிய மூன்று பேரை கைது செய்து காரில் கடத்தி வந்த 500 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கந்திலி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!