ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர் அதிர்ச்சி

ஜோலார்பேட்டை அருகே  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர் அதிர்ச்சி
X

பைல் படம்.

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் ஆப்பிள் கொள்முதல் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா வயது 35. இவர் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் வெளியூர் செல்வதற்காக, மம்தாவை ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள வக்கணம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மம்தாவின் தந்தை அறையை திறந்துள்ளார். அப்போது அறையில் மம்தா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மம்தாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!