ஜோலார்பேட்டையில் கொரோனா  சிகிச்சை மையத்தை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஜோலார்பேட்டையில் கொரோனா  சிகிச்சை மையத்தை  எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
X

ஜோலார்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஜோலார்பேட்டையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா  சிகிச்சை மையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்டோர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

அதனைத் தொடர்ந்து பழைய ஜோலார்பேட்டை பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை தொடங்கி வைத்தார் இதில் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்