கொரோனா சிகிச்சை மையங்களை ஜோலார்பேட்டை திமுக எம்எல்ஏ ஆய்வு

கொரோனா சிகிச்சை மையங்களை ஜோலார்பேட்டை திமுக  எம்எல்ஏ ஆய்வு
X

ஜோலார்பேட்டை  அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களை திமுக எம்எல்ஏ க.தேவராஜ் ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களை திமுக எம்எல்ஏ க.தேவராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை, அக்கரகாரம் கொரோனா சிறப்பு சித்தமருத்துவ மையம் மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் இப்பகுதியிலுள்ள கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவர்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவத்துக்கு தேவையான வசதி ஏற்பாடுகள் குறித்து கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கப்படுகின்றன, அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்துகள் தேவையான வசதி ஏற்பாடுகள் எவ்விதத்தில் உள்ளன என்பதை கேட்டறிந்தார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மு.ஒன்றிய செயலாளர் மு.அசோகன், மருத்துவர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ் குமார், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் சிங்காரவேலன், அரசுத் துறை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!