ஏலகிரி மலையில் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

ஏலகிரி மலையில் சேதமடைந்த  சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
X

சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்யும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

ஏலகிரி மலையில் கனமழையால்  சேதமடைந்துள்ள மேம்பால சாலையை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாபார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி மஞ்சங்கொல்லை புதூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ள மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீர்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஶ்ரீ கிரி வேலன், ஊராட்சி செயலர் சண்முகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்